×

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்ரமிப்பு கட்டிடம் இடிப்பு

ஆரல்வாய்மொழி, ஜன.22 : செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்ரமிப்பு கட்டிடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  செண்பகராமன்புதூர்  - பூதப்பாண்டி சாலையில் தோவாளை சானல் கடந்து செல்கிறது. இதில் கம்பி பாலம்  உள்ளது. இப்பகுதியில் இருந்து தோவாளை வரை இணைப்பு சாலை உள்ளது. இந்நிலையில்  இச்சாலையில் செண்பகராமன்புதூர் அருகே வடக்கு மலையில் இருந்து  மழை தண்ணீர்  வருகின்ற உப்பாத்து ஓடையானது தோவாளை சானலுக்கு அடியில் கடந்து  செல்கின்றது.

இதன் அருகே பொதுப் பணித்துறைக்கு சொந்தமான சுமார் 3.45 சென்ட்  இடத்தை செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த பூமணிதாஸ் என்பவர்  ஆக்ரமித்து கட்டிடம் கட்டியதுடன், அக்கட்டிடத்
தில் மின் இணைப்பு பெற்று  அதனை டாஸ்மாக் கடை அமைக்க வாடகைக்கு கொடுத்தார். இந்நிலையில்  இவ்விடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக பொதுப்பணித் துறைக்கு புகார் வந்ததன்  அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சம்பவ இடத்திற்கு  பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து ஆக்ரமிப்பு இடத்தின் ஒரு பகுதியை  அப்புறப்படுத்திவிட்டு, மேலும் ஆக்ரமிப்பு இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி  வந்ததால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும், பின்னர் அது  இடிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.

அதன் அடிப்படையில் இங்கு இயங்கி  வந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று  காலையில் இந்த இடத்திற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வின்ெசன்ட் லாரன்ஸ்  மற்றும் தோவாளை வருவாய் ஆய்வாளர் குளோரி, கிராம நிர்வாக அலுவலர் பவானி,  சர்வேயர் சங்கரம்மாள் மற்றும் வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்கள்,  பொதுபணித்துறை ஊழியர்கள் வந்தனர். மேலும் பாதுகாப்புக்காக  ஆரல்வாய்மொழி காவல்துறையினரும் வந்திருந்தனர். தொடர்ந்து ஆக்ரமிப்பு  கட்டிடம்  பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில் இடத்தினை  ஆக்ரமித்து வைத்தவர் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகளும், போலீசாரும் முறையான ஆவணம் காண்பிக்க வேண்டும் என  தெரிவித்தனர். ஆனால் அவர் போதுமானது ஆவணத்தினை காண்பிக்காத காரணத்தால்  மீண்டும் இடிக்கும் பணி தொடங்கி ஆக்ரமிப்பு பகுதி முழுவதும் இடித்து  அகற்றப்பட்டது.

Tags : Demolition ,Task Shop ,Shenbagaramanpur ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...