×

நாகர்கோவிலில் தியாகி சிதம்பரநாதன் பிறந்தநாள் விழா

நாகர்கோவில், ஜன.22: மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் 107வது பிறந்தநாள் நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தியாகி சிதம்பரநாதனின் உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் குமரி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மகேஷ் லாசர், அசோக்ராஜ், ஆனந்த், ஆரோக்கிய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday ,Chidambaranathan ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...