×

3 மாதமாக தண்ணீர் வீணாகும் அவலம் நாகை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு இன்று பயிற்சி துவக்கம்

நாகை, ஜன.22: நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (22ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அறிவுரைகளின்படி நாகை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று (22ம் தேதி) முதல் 24ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதன்படி நாகை, கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 5 வட்டாரங்களை சேர்ந்த புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு இன்றும், திருமருகல், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய மூன்று வட்டாரங்களை சேர்ந்த புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு நாளை (23ம் தேதி), செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய மூன்று வட்டாரங்களை சேர்ந்த புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு 24ம் தேதியும் காலை 10 மணிக்கு பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியானது நாகை- புத்தூர் அன்னை ஆரோக்கியமாதா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags : panchayat leaders ,Nagai ,district ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...