×

நடவடிக்கை கோரி ஆர்டிஓவிடம் மனு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்

நாகை, ஜன.22:ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் ஆறுசரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை. சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மரக்காணம் தொடங்கி வேதாரண்யம் வரை சுமார் 5000 கிலோமீட்டர் பரப்பளவிலும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் உட்பட்ட இடங்களில் சுமார் 41 கிலோமீட்டர் பரப்பளவிலும் தனியார் நிறுவனமான வேதாந்தா மற்றும் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஆகியவற்றுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்திருக்கிறது. இதன்படி இதுவரை விளைநிலங்களில் 15 கிணறுகளை தோண்ட சுற்றுசூழல் துறையின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இப்பணிகள் தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஓப்புதல் பெற தேவையில்லை என்ற புதிய நிலைபாட்டின் மூலம் மத்திய அரசு மக்களின் மீது போர் தொடுத்துள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இந்த நாசகார திட்டத்தை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களே களம் இறங்கி புரட்சிகர போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : RTO ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...