கோவிந்தபேரியில் பி.எச்.பாண்டியன் படம் திறப்பு விழா முன்னேற்பாடு - மேடை பணிகள்

வீரவநல்லூர், ஜன. 21: கோவிந்தபேரியில் இன்று நடைபெறவுள்ள பி.எச்.பாண்டியன் படம் திறப்பு விழா பந்தல் அமைப்பு பணிகளை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பார்வையிட்டார். சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரியில், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் படம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. விழாவிற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பி.எச்.பாண்டியனின் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார். இதையொட்டி கோவிந்தபேரியில் நடந்துவரும் பந்தல் அமைப்பு பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பார்வையிட்டார். இதில் முன்னாள் எம்பி சவுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் கருத்தபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பாளை ஒன்றிய ெஜ.பேரவை செயலாளர் முத்துகுட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: