×

சீனாவில் நடக்கும் சர்வதேச திறன் தேர்வில் பங்கேற்க இன்று போட்டித்தேர்வு தொடக்கம் இரண்டு நாள் நடக்கிறது

சிவகங்கை,  ஜன. 21:  சீனாவில் நடைபெறும் சர்வதேச திறன்தேர்வில் பங்கேற்க இன்று போட்டித் தேர்வு தொடங்குகிறது. இன்று, நாளை என 2 நாள் போட்டித் தேர்வு நடக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: இளைஞர்களின் தொழில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்  2021ம் ஆண்டு செப்டம்பரில் சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச திறன்  போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தை சேர்ந்த  இளைஞர்கள் < https://worldskillsindia.co.in/worldskill/world/ > என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.  விண்ணப்பித்திருந்த இளைஞர்களின் தகுதி நிலையைக் கண்டறியும் வகையில், மாவட்ட  அளவிலான திறன் போட்டிகள் ஜன.23 முதல் ஜன.31 வரை நடைபெற உள்ளன. தகுதி நிலை  தேர்வில் பங்கேற்கும் வகையில் முதல் கட்டமாக முன் தகுதித் தேர்வு  (இன்று) ஜன.21 மற்றும் ஜன.22ம் தேதி நடக்கிறது.

எனவே, சர்வதேச திறன்  போட்டிகளில் பங்கேற்பதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் போட்டித்  தேர்வுகளில் பங்கேற்று பயன் பெறலாம். மாவட்ட திறன் போட்டிகளில் வெற்றி  பெறுபவர்கள், மாநில திறன் போட்டிகளில் வெற்றி பெறுவர்கள் தேசிய அளவிலான  திறன் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச திறன் போட்டிகளில்  பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறுவர். விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட  அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  போட்டிகள் தொடர்பான விவரங்கள் செல்போன், மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம்  தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுக்கு பிறந்த தேதிக்கான  தகுதி சான்றிதழுடன், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை நகல்  கொண்டு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன்  பயிற்சி அலுவலரை நேரிலோ அல்லது 04575-240024 என்ற தொலைபேசி எண்ணிலோ,  9942893440, 9499055781 ஆகிய செல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : competition ,International Skills Exam ,China ,
× RELATED கோவை, ராமநாதபுரம், நெல்லையில்...