×

பஸ்களை நிறுத்துவதில் சிக்கல் ராஜபாளையத்தில் அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு மாணவ, மாணவியருக்கு சுகதாரக்கேடு

ராஜபாளையம், ஜன. 21: ராஜபாளையத்தில் அரசுப் பள்ளி அருகே குவிக்கப்படும் குப்பையால் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லாதாதால், சுகாதாரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தெருக்களிலும் போதிய குப்பைத் தொட்டி வைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். இதில், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் செல்லும் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பூபால்பட்டி தெருவில் மலைபோல குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் வகுப்புகளுக்குள் செல்கிறது. இதனால், மாண்வ, மாணவியரின் படிப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, ராஜபாளையத்தில் நகராட்சி நிர்வாகம் போதிய சுகாதாரப் பணியாளர்களை நியமித்து, தெருக்களில் கொட்டும் குப்பைகளையும், அரசு பள்ளி அருகே கொட்டப்பட்டும் குப்பைகளையும் தினசரி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajagopal ,
× RELATED நெல்லை தனிப்படை காவலர் மீது போக்சோவில் வழக்கு..!!