மேலூர் அருகே அரிட்டாபட்டியில் பறவைகள் கணக்கெடுப்பு பனை உழவாரன், சிவப்பு ஆள்காட்டி சிக்கின

மேலூர், ஜன.21: மேலூர் அருகே அரிட்டாபட்டியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் பனை உழவாரன், சிவப்பு ஆள்காட்டி போன்ற அரிய வகை பறவைகள் சிக்கின. தமிழகம் முழுவதும் பொங்கல் முதல் 4 நாட்களுக்கு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வந்தது. இதில் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் திருச்சி, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த பறவை ஆர்வலர்கள் சரவணன், பாலபாரதி, சுதா கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

கருங்குருவி, மழைக்குருவி, இரட்டைவால் குருவி, சில்வர்பில் கொக்கு, வெள்ளை கொக்கு, மயில் கதிர்குருவி, செண்பகம் ராக்கி மி சவுள் காகம், கருங்காகம், பனங்காடை, வாலாட்டி குருவி, மஞ்சள் வாலாட்டி குருவி, தீக்கை அரிவாள் மூக்கன், சிவப்பு ஆள்காட்டி, வல்லூறு, செம்பருந்து, கரும்பருந்து, பனை உழவாரன், புல்புல் ரெட் பஸ், ஈ பிடிப்பான் என ஏராளமான பறவை இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை கணக்கெடுத்து ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது. இவர்களுக்கு அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், சிவலிங்கம் மற்றும் அரிட்டாபட்டி தெற்குதெரு அரசினர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணிக்கு உதவினர்.

Related Stories: