மாலையில் படியுங்கள் கோலம் போட்ட பெண் மாயம்

திருமங்கலம், ஜன.21: வீட்டின் முன்பு கோலம் போட்ட இளம்பெண் மாயமானார். திருமங்கலத்தை அடுத்துள்ள தென்பழஞ்சியை சேர்ந்தவர் கண்ணன்(44). இவரது மகள் சுவேதா(19). மதுரை வீரபாஞ்சானில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை சுவேதா தனது வீட்டின் முன்பு கோலம் போட வெளியே வந்தார். அப்போது திடீரென மாயமானார். அக்கம்பக்கத்து வீடுகளில் தேடியும் சுவேதா கிடைக்காததால் அவரது தந்தை கண்ணன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சுவேதாவை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: