கும்மிருட்டாக காட்சியளிக்கும் மீனாட்சி கோயில் சித்திரை வீதிகள்

மதுரை, ஜன.21: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை வீதிகள் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இதனால் பக்தர்கள் நடக்க கூட முடியாத நிலை உருவாகி உள்ளது. கூடுதலாக மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். உலக புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு மதுரை மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலில் இரவு 12 மணி வரை பக்தர்கள் மாசி வீதிகளில் சுற்றியுள்ள கடைகளில் பொருட்களை வாங்கி கொண்டு தங்கும் இடங்களுக்கு செல்கின்றனர். இரவு நேரங்களில் கோயிலை சுற்றியுள்ள பகுதியான தெற்கு கோபுரம் மற்றும் கிழக்கு, வடக்கு கோபுர பகுதியில் போதிய லைட் வெளிச்சம் இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது. இதனால் கோயிலை சுற்றி பக்தர்கள் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். இருட்டாக இருப்பதால் பல்வேறு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஆந்திராவை சேர்ந்த பக்தர் ராவ் கூறும்போது, மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனத்திற்கு வந்துள்ளோம். நேற்று இரவு 9 மணியளவில் கடைக்கு சென்று விட்டு சித்திரை விதியில் உள்ள தங்கும் அறைக்கு சென்ற போது, தெற்கு கோபுர வாசல் பகுதியில் குழி தோண்டப்பட்டுள்ளது. லைட் வசதிகள் சரியாக இல்லாததால் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. புகழ்பெற்ற கோயிலில் இதுபோன்று லைட் வசதிகள் இல்லாதது மிக வேதனையாக உள்ளது. எனவே, கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பழைய லைட்களை மாற்றி புதியதாக நவீன வசதியுடன் கூடுதலாக  லைட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: