குறைதீர்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி மனு முசிறி அருகே கணேசபுரத்தில் சாய்ந்து விழுந்த புளியமரத்தை ஏலம்விட மக்கள் கோரிக்கை

முசிறி, ஜன.21: முசிறி அருகே துறையூர் ரோட்டில் சாலை ஓரத்தில் விழுந்து கிடக்கும் புளிய மரத்தை ஏலம் விட்டு அப்புறப்படுத்த நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறியில் இருந்து துறையூர் செல்லும் ரோட்டில் கணேசபுரம் அமைந்துள்ளது. இந்த ஊரின் அருகே சாலையோரத்தில் வலதுபுரம் நன்றாக வளர்ந்த புளிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்து கிடக்கிறது. இந்த மரத்தை ஏலம் விட்டு அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரத்தை ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறும்போது, முசிறி அருகே வாளவந்தி, கணேசபுரம் என்ற இடத்தில் சாலைஓரத்தில் புளியமரம் சாய்ந்து நீண்ட நாட்களாக கிடக்கிறது. இந்த மரத்தை அப்படியே விட்டுவிட்டால் மரம் பயனில்லாமல் போக வாய்ப்பு உள்ளது. நன்கு வளர்ந்து சாய்ந்து விழுந்து கிடக்கும் இந்த மரத்தை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே நெடுஞ்சாலை துறையினர் உரிய அறிவிப்பு செய்து விழுந்து கிடக்கும் புளியமரத்தை ஏலம் விட வேண்டும் என்று கூறினார்.

Advertising
Advertising

Related Stories: