கொலையா?: போலீசார் விசாரணை அரசு பொருட்காட்சியில் இலக்கிய பட்டிமன்றம்

திருச்சி, ஜன.21: திருச்சியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியில் திருவள்ளுவர் பிறந்ததின விழாவினை முன்னிட்டு இலக்கிய பட்டிமன்றம் நடைபெற்றது. திருச்சியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியில், மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு சார்பில் முத்தமிழ் இலக்கியப் பட்டிமன்றம், திருவள்ளுவர் வழியில் காவியம் படைத்ததில் சிறப்பு மிகுதி யாருக்கு ? இளங்கோவடிகளுக்கே, கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கே என்ற தலைப்பில் சத்தியசீலன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இளங்கோவடிகள் அணியில் புவனகிரி அன்பழகன், புதுக்கோட்டை பாரதி, மாணிக்கம் உள்ளிட்டோரும், கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கே! அணியில் நகைச்சுவை இமயம் சண்முகவடிவேல், இசையரசி விஜயசுந்தரி, கருத்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>