×

ரூ.11 லட்சம் சேதம் மேல கல்கண்டார்கோட்டையில் வீதியில் ஓடும் சாக்கடையால் துர்நாற்றம் போராட்டம் நடத்த முடிவு

திருச்சி, ஜன.21: திருச்சி மேல கல்கண்டார்கோட்டையில் வீதியில் ஓடும் சாக்கடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போரட்டம் நடத்திட முடிவு செய்துள்ளனர். திருச்சி மாநகரில் சாக்கடை கால்வாய்களை மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தூர்வாரும் சம்பவங்கள் நடக்கும். அது பெயரளவில் என சமூக ஆர்வளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை உறுதிபடுத்தும் விதமாக 30வது வார்டு மேல கல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் 7வது தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் பல மாதங்களாக தெருவில் உள்ள சாக்கடைகளை தூர்வாரவில்லை. இதனால் சாக்கடை நீர் தெருவில் வழிந்தோடுகிறது. கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் கொசுக்கடியால் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதிமக்கள் அறிவித்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...