சேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சேலம், ஜன.21: சேலம் அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகை தெருவை சேர்ந்தவர் நடராஜன். கடந்த 2017ம்ஆண்டு அக்டோபர் மாதம், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள், அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னங்குறிச்சி ஆறுமுகஅய்யர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(28), எடப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்த எடப்பாடி செல்வம்(29) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நடுவர் சந்தோஷ், வாலிபர் மணிகண்டனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். எடப்பாடி செல்வத்தை விடுவித்தார்.

Advertising
Advertising

Related Stories: