சேலத்தில் வெவ்வேறு இடத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 2 பேர் கைது

சேலம், ஜன.21: சேலத்தில் வெவ்வேறு இடத்தில் இருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் குகை சிவனார் தெருவை சேர்ந்தவர் ரவி (55). இவர் அங்குள்ள ஸ்ரீராம் ஆசிரமம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, வாலிபர் ஒருவர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு ரவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து அவரை மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் ரவி புகார் அளித்தார். எஸ்ஐ ராஜேந்திர ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். அதில், பணம் கேட்டு மிரட்டியது, அன்னதானப்பட்டி அகத்தியர் தெருவை சேர்ந்த தமிழரசன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

இதேபோல், சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்(36). இவர், நெத்திமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த பிரபல ரவுடியான தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த தர்மன் (எ) தர்மராஜ் (26),  வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் கோவிந்தன் புகார் அளித்தார். எஸ்ஐ சித்தன், வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி தர்மனை கைது செய்தார். இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: