×

மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஆட்டையாம்பட்டி, ஜன.21: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சார்பில், தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம், சேலம் மெயின் ரோடு மற்றும் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்று, ஒலி பெருக்கி மூலம் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இளம்பிள்ளை: மகுடஞ்சாவடி காவல் நிலையத்தின் சார்பில், இளம்பிள்ளையில் நடந்த பேரணியில், தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகள் கடைப்பிடிப்பது, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எஸ்.ஐ பெரியசாமி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இடைப்பாடி: கொங்கணாபுரம் காவல்நிலையம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். எஸ்ஐகள் வெங்கடாஜலம், ராமன், வசந்தி ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதே போல், இடைப்பாடி காவல் நிலையம் சார்பில், நாச்சூர்கேட் கடையில் இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். இதே போல், தேவூர் காவல்நிலையம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஓமலூர்: ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடந்த விழாவில், பெண்கள்  மட்டும் கலந்துகொள்ளும் ஹெல்மெட் விழிப்புணர்வு, இருசக்கர வாகன பேரணிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், சேலம் பெரியார் பல்கலைக்கழக  மாணவிகள், பேராசிரியைகள், தனியார் கல்லூரி பேராசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கூடுதல் எஸ்பி அன்பு  கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக பேரணி  சென்றது.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்