ஆத்தூர் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம்

ஆத்தூர், ஜன.21: ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம் மாவட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூற்பாலை நிர்வாகிகள் மற்றும் பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், ஆர்.சி.ஹெச் ரகம் குவிண்டால் ₹4799 முதல் ₹5,369 வரையும், டி.சி.ஹெச் ரகம் ₹4909 முதல் ₹6699 வரையிலும் விற்பனையானது.இதில், 5300 மூட்டை பருத்தி, ₹1 கோடிக்கு ஏலம் போனது. கடந்த இரண்டு வாரங்களாக, பொங்கல் பண்டிகை என்பதால், ஏலம் இல்லாத நிலையில் நேற்று விற்பனைக்கு வந்த  பருத்திக்கு, கூடுதல் விலை கிடைக்கும் என நினைத்த விவசாயிகளுக்கு, வியாபாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட விலை ஏமாற்றத்தை அளித்தது.

Advertising
Advertising

Related Stories: