மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் மூலம் கோவையில் சூரியமின் திட்ட இலவச பயிற்சி

கோவை, ஜன.21:  கோவை அருகே வடவள்ளியில் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நேர்டு தொண்டு நிறுவனத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் சூரியமித்ரா 3 மாதம் இலவச சூரிய மின் திட்டம், நிறுவுதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இதை நேர்டு தலைவர் சத்யஜோதி வழங்கினார். விழாவில், நேர்டு பன்னாட்டு புதுப்பிக்கக்கூடிய  எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் காமராஜ் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் சூரிய மின் திட்டங்களின் மூலம், மின் உற்பத்தியை பெருக்கி, மின் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு 2022க்குள் ஒரு லட்சத்திற்கு 75 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை சூரிய மின் சக்தி போன்ற புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Advertising
Advertising

தற்போது, சூரிய மின் சக்தியின் முக்கியத்துவம் காரணமாக 4 லட்சத்து 50 ஆயிரம் மெகாவாட் உயர்த்தி இலக்கை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த இலக்கை அடைய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தொழில்நுட்ப அலுவலர்கள் தேவைபடுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப அலுவலர்களை உருவாக்க ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 மாதத்திற்கு மத்திய எரிசக்தி அமைச்சகம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப் பயிற்சியில், முதல் இரு மாதங்களுக்கு தொழில்கல்வி மற்றும் ஒரு மாதம் சூரிய மின்கல நிறுவனங்களில் நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில அரசின் சூரிய மின் கொள்கை 2019ம்படி சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க 38 நாட்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்கும் இடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 என 38 நாட்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். 2020ம் ஆண்டு முதல் பயிற்சி துவங்கப்பட்டு உள்ளது. 94439 34139 என்ற எண்ணில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Related Stories: