நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

ஓமலூர், ஜன.21: ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டார கிராமங்களில், நடப்பாண்டு நெல் சாகுபடி இலக்கை அடைவதற்கு, விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை வேளாண்மை துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி நடப்பு 2019-20ம் ஆண்டில் 45.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மாநிலம் முழுவதும் 36.23 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நடந்துள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தமாக இதுவரை 40 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்து முடிந்துள்ளது.

சாகுபடி இலக்கை அடைவதற்கு இன்னும் 5.60 லட்சம் ஏக்கர் எஞ்சியுள்ளது. அதனால், அறுவடை முடிந்த இடங்களில் மீண்டும், நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை வேளாண்மை துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக, மானிய உதவிகளை வழங்க வேளாண்மை துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளையும், விவசாயிகள் ஊக்குவிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: