மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம்

சேலம், ஜன.21: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கை: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், வரும் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு, மகுடஞ்சாவடியில் உள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால் தலைமை வகிக்கிறார். இதில் சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற, இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், துணை அமைப்புகளான இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, விவசாயஅணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, தொண்டரணி, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: