×

பொதுமக்கள் அச்சம் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெற அழைப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன. 21: இந்தியா முழுவதும் விவசாயிகளுக்காக பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் (PMKISAN) கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000- வீதம் ஆண்டுக்கு ரூ.6000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் (New Farmer Enrollment) தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் அல்லது கணினி மையத்தில் செலுத்தி புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை கிடைக்க பெறாத விவசாயிகள் தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை செந்துறை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.

மேலும் வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் அனைத்தையும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உழவன் செயலியை புதிதாக பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் சென்று uzhavan app என டைப் செய்து இன்ஸ்டால் என்ற பச்சைநிற பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்த விவசாயிகள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று uzhavan app என டைப் செய்து அப்டேட் செய்து பயனடையலாம்.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...