×

வேதன்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

பொன்னமராவதி, ஜன.21: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி புனித ஜோசப் பள்ளியில் இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் லட்சுமணன் தலைமை வகித்தார். வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் சுமதி, பள்ளி முதல்வர் அமலாஜோசப், வர்த்தகர் கழக துணைச் செயலர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேந்தன்பட்டி முருகன் வரவேற்றார். முகாமில் கண் சம்மந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் அட்சயா, பிரகிலன் கோட்சர், அனுபவ் உபதேவ் மற்றும் மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 166 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 28 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தெர்ந்தெடுக்கப்பட்டு மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இலவசமாக கண்ணாடி 30பேருக்கு வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர்கள் சங்கரன், சேஜஸ்பிரலன், ஓபிஷோ ஆகியோர் அனைத்து விதமான சம்மந்தமான அனைத்து வியாதிகளுக்கும் 140 பேருக்கு பரிசோதனை செய்தனர் இதில் வேந்தன்பட்டி ஜெயம், பொறியாளர் சோமசுந்தரம், பள்ளி துணை முதல்வர் ராஜ்குமார், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Free General Medical Camp ,Vedanpatti ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் பொது மருத்துவ முகாம்