×

கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 20 வாகனங்கள் ஏலம் விட எஸ்ஐ துரித நடவடிக்கை

கந்தர்வகோட்டை, ஜன.21: கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 20 வாகனங்களை ஏலம் விட எஸ்ஐ நடவடிக்கை எடுத்துள்ளார். கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நடந்தபோது அந்த இடத்தில் கிடக்கும் வாகனங்களை காவல்நிலையத்திற்கு கொண்டு வருவது வழக்கம். அதுபோல் கொண்டு வரப்படும் வாகனங்கள் உரியவர்கள் தங்களது வாகனங்களுல்லு உண்டான உரிய ஆவணங்களை காட்டி வழக்கு முடிந்தவுடன் எடுத்து சென்று விடுவார்கள். இதுபோல் பல இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன்கள் காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கிறது. இதில் இதுவரை யாராலும் கோரப்படாத நிலையிலும், உரிய ஆவணங்களின்றி இருக்கும் 20 இருச்சக்கர வாகனங்களை எஸ்ஐ.பாஸ்கர் கண்டறிந்து அவற்றை பிரித்து அரசு மூலம் ஏலம் விடுவதற்கு மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி பிரிக்கப்பட்ட 20 இருச்சக்கர வாகனங்களை தாசில்தார் சதீஷிடம் ஒப்படைத்து தாசில்தார் மூலமாக கருவூலத்திற்கு அனுப்பப்பட்டு முறையாக ஏலம் விடப்பட்டு அவற்றின் வருவாய் அரசு கணக்கில் சேர்க்கப்படவுள்ளது. இது போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை முறையாக ஏலம் விடப்படுவதால் காவல் நிலையங்களில் இடநெருக்கடி ஏற்படாமலும் இருப்பதுடன் வாகனங்கள் மழை, வெயில் போன்ற இயற்கை சூழ்நிலைகளால் யாருக்கும் பயன்படு இல்லாமல் அரசிற்கு வருவாய் வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

Tags : SI ,police station ,
× RELATED நண்பனை கொன்றவர்களை பழிவாங்க வாளுடன் சுற்றிய வாலிபர் கைது