நாமக்கல் அருகே வாலிபர் கொலை முயற்சி வழக்கில்

4 பேர் கைதுநாமக்கல், ஜன.21: நாமக்கல் அருகே வாலிபர் கொலை முயற்சி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வீசாணம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(எ)சண்முகசுந்தரம்(25). இவர், கடந்த 18ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகே பைக்கில் சென்றார். அப்போது, அங்கு வந்த 4 பேர், குமாரை அரிவாளால்  வெட்டி விட்டு தப்பினர். இதில், வலதுகையில் படுகாயமடைந்த அவர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், நாமக்கல் எஸ்ஐ பூபதி  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

இதில், வீசாணத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் குமாருக்கும், கொசவம்பட்டியைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட தகராறில்  இந்த மோதல் நடந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தி, நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த குமரேசன்(27), சக்தி(28), அர்ச்சுணன்(23), ரஞ்சித்(22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையத்தில் வழிப்பறி முயற்சி வழக்கில் 4 பேர் கைது குமாரபாளையம், ஜன.21: குமாரபாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்(25). டயர் ரீடிரேடிங் நிறுவனம் நடத்தி வரும் இவர், குமாரபாளையம் காய்கறி மார்கெட் அருகே நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனால், திடுக்கிட்ட சித்திக் கூச்சலிட்டுள்ளார். உடனே, அவர் மீது மிளகாய் பொடியை வீசியுள்ளனர். இதற்கிடையே சித்திக்கின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு சிலர் ஓடிவந்தனர். இதை கண்ட 4 பேரும் தப்பியோடினர். இதுகுறித்த புகாரின்பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், கத்தியை காட்டி வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட பெராந்தார்காடு பகுதியைச் சேர்ந்த சர்க்கரை(எ) கார்த்தி(33), சின்னப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோபால்(34), குரங்கு பெருமாள்(33), குப்பாண்டபாளையம் சௌந்தர்ராஜ்(27) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : murder ,Namakkal ,
× RELATED ஓசூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்