சேலம் ஏற்காடு ரோடு கோரிமேட்டில் உள்ள சேலம் வேலைவாய்ப்பு அசேலம், ஜன.21:சேலம் ஏற்காடு ரோடு கோரிமேட்டில் உள்ள சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலத்தில் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு, ரத்து செய்யப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து பதிவை புதுப்பித்து வந்தால் அரசுவேலைக்கு பதிவுமூப்பு வரும்போது அவர்களது பெயரும் பரிந்துரை செய்யப்படும்.

முகாம் வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை நடக்கிறது.  இம்முகாமில் அக்கவுண்டன்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சூபர்வைசர், டைப்பிஸ்ட், டெலிகாலர், மிஷின் ஆபரேட்டர், சேல்ஸ் இன்ஜினியர், டெய்லர்  போன்ற பணியிடங்களுக்கு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள், தேவைப்படும்  பணியாளர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி போன்ற விவரங்களை, முன்னதாகவே சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வேலை தேடும் மனுதாரர்களும், வேலையளிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Salem Yercaud Road Gorimet ,
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாத மதுபான கடைகள் திடீர் மாயம்