×

உரிய ஆவணம் இல்லாத 121 வாகனங்களுக்கு ₹3.22 லட்சம் அபராதம்

கிருஷ்ணகிரி, ஜன.21:பொங்கல் பண்டிகையின்போது உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 121 வாகனங்களுக்கு ₹3.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் (19ம்தேதி) வரை கிருஷ்ணகிரி டோல்கேட்டில் வேலூர் மண்டல பறக்கும்படை ஆர்டிஓ துரைசாமி மற்றும் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலும், ஓசூர் ஜூஜூவாடியில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரிய பர்மிட் இல்லாமலும், அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி சென்றது உள்ளிட்டவைகளுக்காக 108 ஆம்னி பஸ்கள், 8 லாரிகள், 5 மினி வேன்கள், 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 121 வாகனங்களுக்கு ₹3 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையில், கிருஷ்ணகிரி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், அன்புசெழியன், ஓசூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதரன், வேலூர் பறக்கும் படை வாகன ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்