×

ஓசூரில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

ஓசூர், ஜன.21: ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3வது செவ்வாய்கிழமை  கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று (21ம்தேதி) நடைபெற இருந்த இம்மாதத்திற்கான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Hosur ,
× RELATED மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை