திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கில் சாவு


வேப்பனஹள்ளி, ஜன.21: வேப்பனஹள்ளி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். வேப்பனஹள்ளி அடுத்த தடத்தாரை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(25). இவரது மனைவி பிரேமா(19). இவர்களுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. மணிகண்டன் தனது தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிலுள்ள அறையில் தனியாக இருந்த பிரேமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது, பிரேமா தூக்கில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, பிரேமாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால், இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆர்டிஓ தெயவநாயகி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : teenager ,
× RELATED காதலிக்க மறுத்ததால் விரக்தி இளம்பெண்ணின் மொபட் எரிப்பு : வாலிபருக்கு வலை