×

குறைதீர் கூட்டத்தில் 217 மனுக்கள் குவிந்தது

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 217 மனுக்கள் பெறப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து குறைகளை கேட்டறிந்தார். இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பட்டா வேண்டுதல், முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 217 மனுக்கள் அளித்தனர். இதன் மீது விசாரித்து உரிய தீர்வு காணுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உடனுக்குடன் மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதில் டிஆர்ஓ ரஹமத்துல்லா கான், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கோவிந்தன், தனி துணை கலெக்டர் கீதா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...