×

காளான் உற்பத்தி விளக்க பயிற்சி

தர்மபுரி, ஜன.21: பாப்பாரப்பட்டிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் உற்பத்தியாளர் மற்றும் இயற்கை உற்பத்தியாளர்கள் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்  சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்தியாவின் வேளாண் திறன் மேம்பாட்டுக்கழக திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தியாளர் மற்றும் இயற்கை உற்பத்தியாளர், அங்கக உற்பத்தியாளர் ஆகிய இரண்டு தலைப்புகளில் 25 நாட்கள் பயிற்சி வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. காளான் உற்பத்தியாளர் பயிற்சியில் காளான் உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்தும் மற்றும் இயற்கை உற்பத்தியாளர் பயிற்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை வேளாண்மை சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்தும் 25 நாட்களுக்கு விரிவாக செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட ள்ளது. இம்முகாமில் பங்குபெறுபவர்களுக்கு, இந்தியாவின் வேளாண் திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் குறைந்தது 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இலவசமாக பெற்றுக் கொண்டு, வரும் 30ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா