×

திருவாரூர் நகர்புற பகுதிகளில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர், ஜன. 21: திருவாரூர் நகர்ப்புற பகுதிகளில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணாதுரை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்களின் குறைகளை கேட்டு அவற்றிற்கான தீர்வுகளை விளக்கிக் கூறினார். மேலும், நுகர்வோர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக் கைகள் விரைவில் எடுக்கப்படும். திருவாரூர் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து மக்கும் குப்பையை தங்கள் பகுதியிலேயே உரமாக மாற்றிட முன்வரவேண்டும் என்றும் மக்கா குப்பையை நகராட்சி துப்புரவாளர்களிடம் ஒப்படைக்குமாறும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில், புறவழி சாலையின் ஓரங்களில் முட்செடிகள் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக பழைய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பாலம் போன்ற இடங்களில் மின் விளக்குகள் சரியாக எரி வதில்லை. நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரும்பாலான கடைகள் மற்றும் உணவகங்களில் டீ ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளிலும், வடைகள் தாள்களிலும் கொடுக்கப் படுகிறது. நாளடைவில் புற்றுநோய் போன்ற வியாதிகளை உண்டாக்கும். எனவே மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம் செல்லும் தனியார் பேருந்துகளில் சாதாரண நேரங்களில் பயண கட்டணம் ரூ.15 என்றும் விழாக்காலங் களில் பயண கட்டணம் ரூ.20 என்றும் வசூலிக்கப்படுகிறது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டன. முன்னதாக சங்கத்தின் பொதுசெயலளாலர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் துணைத்தலைவர் அழகிரிசாமி நன்றி கூறினார்.

Tags : Thiruvarur ,areas ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்