×

அரியலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 221 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

அரியலூர், ஜன. 21: அரியலூரில நடந்த குறைதீர் கூட்டதட்தில் 221 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்களிடமிருந்து 209 கோரிக்கை மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்கள் என 221 மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து சமூக பாதுகாப்புத்துறை மூலம் 2019-20ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களிடையே நடந்த மண்டல அளவிலான (விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற அரியலூர் மாவட்டம் தென்னூர் புனித ஜோசப் குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர், ஜன. 21: செந்துறை அடுத்த நல்லான்காலனியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.செந்துறை அடுத்த நல்லான்காலனி கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 1967ம் ஆண்டு அரசால் 24 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி தரப்பட்டது. அதன் பிறகு எங்கள் பகுதிக்கு எந்த ஒரு வீட்டுமனை பட்டாவும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் 133 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தேவைப்படுகிறது. இதற்காக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் எடுக்க செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் 52 விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை தருவதாக கூறினர். ஆனால் இதுவரை வேலை வழங்கவில்லை. எனவே வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் கலெக்டரிடம் 200 வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி சென்றனர். அப்போது வேலை வழங்கப்படாத பட்சத்தில் விரைவில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளையும் ஒப்படைப்போம் என்றனர்.

Tags : Ariyalur ,grievance hearing ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...