×

செங்கம் அருகே பைக்கில் சென்ற விவசாயிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது

செங்கம், ஜன.21: செங்கம் அருகே பைக்கில் சென்ற விவசாயிடம் கத்தியைக்காட்டி வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கம் அடுத்த பேயாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சென்னி(35), விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை செங்கத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, மண்மலை கிராமம் அருகே சென்றபோது செல்போனில் அழைப்பு வந்தது. இதனால் பைக்கை சாலையோரம் நிறுத்தி பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கத்தியைக் காட்டி, சென்னியின் பாக்கெட்டில் இருந்த ₹300ஐ பறித்து சென்றார். இதுகுறித்து சென்னி செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் போலீசார் செங்கம் பஸ் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(27) என்பதும், இவர், சென்னியிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

Tags : Chengam ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை