×

ஆரணி அருகே மினி பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

ஆரணி, ஜன.21: ஆரணி அருகே தனியார் மினிபஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆரணி புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் மினிபஸ் ஒன்று 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சம்புவராயநல்லூர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றது. இரவு 8.40 மணியளவில் பாளையம்-காமக்கூர் சாலையில் சென்றபோது மினிபஸ்சின் டயர் வெடித்தது.இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர விவசாய நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆரணி அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த கலைமணி(40), ராஜாமணி(50), முனியன்குடிசையைச் சேர்ந்த இந்துமதி(23), நாயகன்(70), சம்புவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமாலிங்கம்(39), நெசல் கிராமத்தைச் சேர்ந்த காதர்பாஷா(24), மேல்மட்டை விண்ணமங்கலத்தை சேர்ந்த மோகன்தாஸ்(36) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆரணி, வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...