×

பிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்

சென்னை: இந்தியாவில் அனைத்து தரப்பினராலும் விரும்பும் ஆடைகள், காய்கறிகள், பல சரக்கு பொருட்கள் வாங்கக்கூடிய மிகப் பெரிய விற்பனை மார்க்கெட்டான ‘பிக் பஜார்’ தள்ளுபடி விற்பனையை துவங்க உள்ளது. நாளை துவங்கி, வரும் 26ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை அனைத்து பிக் பஜாரிலும் வழக்கப்பட உள்ளது. இதில், ஆடைகளுக்கு 50 முதல் 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோல் உணவு பொருட்கள், பல சரக்கு பொருட்கள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ரூபே கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

பெண்கள் டாப்ஸ் ஒன்று ஒரிஜினல் விலை ரூ.599. இது தள்ளுபடியில் ரூ.299க்கும், குழந்தைகள் இரு பாலருக்குமான டி-சர்ட் விலை ரூ.299. இது தள்ளுபடி விலையில் ரூ.149 தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளது. இதுபோன்று, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், சமையலுக்கு தேவையான பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான டிவி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிக்பஜார் முதன்மை செயல் அலுவலர் சதாசிவ் நாயக் தெரிவித்துள்ளார்.

Tags : Big Bazaar: Launch ,
× RELATED விருதுநகரில் தீபாவளியை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை