×

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூரில் திமுக இளைஞர் அணி இணையதள துவக்க விழா: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

செங்கல்பட்டு, ஜன.21: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் நகர  திமுக இணையதள தொடக்க விழா நேற்று நடந்தது. காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன்  தலைமை வகித்தார். மறைமலைநகர் நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம் வரவேற்றார். எம்எல்ஏ  வரலட்சுமி மதுசூதனன்,  காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக்,  தலைமை பொதுக்குழு உறுப்பினர்  து.மூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஆல்பர்ட்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக இளைஞரணி மாநில செயலாளர்  உதயநிதி ஸ்டாலின்,  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெபி பிரசிடென்சி தங்கும் விடுதியை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. காஞ்சிபுரம் மாவட்ட நிகழ்ச்சி என்றாலே நான் உடனே கலந்து கொள்வேன். தமிழ்நாட்டில் எத்தனையோ நிகழ்சியில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால், இந்த மாவட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.  நான் திமுக தலைவர் கருணாநிதி, தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு என்னை உழைப்பதில் ஒப்பிட்டு கூறினார்கள். நிச்சயமாக அவர்கள் இருவரையும் என்னோடு இனிமேல்  ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் உழைத்த உழைப்பில் நான் கால் தூசி கூட இன்னும் உழைக்கவில்லை. இப்போதுதான் கட்சிக்காக  உழைக்க தொடங்கியுள்ளேன்.

மறைமலைநகர் நகர திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள இணையதளம் கட்சிக்கும், தலைமைக்கும் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும், மிக உறுதுணையாக இருக்கும். மிக அற்புதமாக இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளனர்.
இதுபோன்ற இணையதளத்தை தலைமை கழகம் ஏன்,  இளைஞரணி கூட உருவாக்கவில்லை. இங்கு உருவாக்கப்பட்ட இணையதளம் நமது கட்சிக்கும் தலைமைக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. இதனால், மறைமலைநகர் நகர திமுக  செயலாளர் உள்ளிட்டவர்களை  பாராட்டுகிறேன் என்றார். பின்னர், நகர திமுக இணையதள செயலியில் உள்ள பயன்களை கட்சியினருக்கு விளக்கினார்.

நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, இதயவர்மன், மாவட்ட நிர்வாகிகள் வைத்திலிங்கம், தமிழ்மணி, துரைசாமி, விஸ்வநாதன், அன்புசெழியன், மறைமலைநகர் நகர நிர்வாகிகள், சீனிவாசன்,  முத்து,  வனிதா சுரேஷ், முருகேசன்,  மாவட்ட பிரதிநிதிகள், சுப்பிரமணி,  கிரிச்சந்திரன்,  அசோகன்,  கருணாநிதி,    தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராஜன்.  ஆப்பூர் சந்தானம்.  நகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் பரணி, சிலம்புசெல்வன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ச.கிஷோர் குமார், ச.நந்தினி ஆகியோர் நன்றி கூறினர்.

Tags : DMK ,youth team ,ceremony ,Thirukkacharu ,Chengalpattu ,Udayanidhi Stalin ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்