×

கோடை காலம் நெருங்குதை முன்னிட்டு தர்பூசணி பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்

செய்யூர்,  ஜன.21: செய்யூர் வட்டாரப் பகுதிகளில் கோடை காலம் வருவதையொட்டி விவசாயிகள் தர்பூசணி பயிர்களை பயிரிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் கோடைகாலங்களில் ஏற்படும் கடும் வெப்பநிலையை தணிக்க தர்பூசணி மனிதர்களுக்கு ஒரு அங்கமாக உள்ளது. இதற்காகவே விவசாயிகள் பலர் ஆண்டுதோறும் கோடைகாலத்திற்கு முன்னதாக தர்பூசணியை பயிரிட துவங்குகின்றனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் பலர் தர்ப்பூசணி பயிரிடும் பணியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக செய்யூர் தாலுகா சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தர்பூசணியை பயிரிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்,  புத்திரன்கோட்டை கிராமத்தில் எனக்கு சொந்தமான 100 ஏக்கர் விளைநிலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி பயிரிட்டுள்ளேன். இந்த பயிர் 50 முதல் 65 நாட்களில் முழுமையாக வளர்ந்து அறுவடை செய்யப்படுகிறது. சொட்டு நீரில் தர்பூசணி பழம் விளைவதால் அதன் சுவையும் தரமும் நன்றாக இருக்கும். இதன்மூலம் எனக்கு போதிய லாபம் இல்லாவிட்டாலும், நான் இதனை விருப்பத்துடன் செய்து வருகிறேன். இப்பணியை மேற்கொள்ள வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...