ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 6 வாரம் பயிற்சியை தொடர்ந்து 45 விஏஓக்களுக்கு பணி வரன்முறை தேர்வு

வேலூர், ஜன.21: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 6 வாரம் பயிற்சியை தொடர்ந்து 45 விஏஓக்களுக்கு பணி வரன்முறை தேர்வு நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டிஆர்ஓ பார்த்தீபன் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் தாசில்தார் சரவணமுத்து தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் 45 விஏஓக்கள் பணிவரன் முறை செய்வதற்கான 6 வாரம் பயிற்சி கடந்த மாதம் 10ம் தேதி முதல் நேற்று வரையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று 3 கட்ட தேர்வு வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த தேர்வில், விஏக்களுக்கான அதிகாரம், கடமை குறித்து தேர்வு நடந்தது. மேலும் 6 வாரத்தில் கால்நடை, மருத்துவம், விவசாயம், காவல், கூட்டுறவு, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேர்வு பெறுபவர்களுக்கு பணிவரன்முறை செய்ததற்கான ஆணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: