உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

உடன்குடி,ஜன.21: மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடன்குடி ஒன்றியத்தில் 23 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. உடன்குடி யூனியனில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பாலசிங் முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் மெஞ்ஞானபுரத்தில் கிருபா, லெட்சுமிபுரத்தில் ஆதிலிங்கம், செம்மறிக்குளத்தில் அகஸ்டா மரியதங்கம், நங்கைமொழியில் விஜயராஜ், செட்டியாபத்தில் பாலமுருகன், யூனியன் கவுன்சிலர்கள் செல்வின், தங்கலெட்சுமி ஆதிலிங்கம் ஆகியோர் அந்தந்த முகாமில் சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தனர். இதில் டாக்டர் ஐயம்பெருமாள், யூனியன் துணைச்சேர்மன் மீரா, சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

   சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி தொடங்கி வைத்தார்.  முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தொடக்கபள்ளியில் நடந்த  முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரீஸ் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம்  ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி முகாமை தொடங்கி வைத்தார்.இதில் சுகாதார செவிலியர் லதா, சித்ரா,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார். பள்ளக்குறிச்சி ஊராட்சியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சித் தலைவர் சித்ராரங்கதன் தொடங்கி வைத்தார். இதில் படுக்கப்பத்து மருத்துவ அலுவலர்,  சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் மற்றும்  செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: