திருச்சி- காயல்பட்டினம் இடையே புறா பந்தயம்

ஆறுமுகநேரி, ஜன.21: காயல்பட்டினம் புறா பந்தய கிளப் சார்பில்  திருச்சியில் இருந்து காயல்பட்டினம் வரை புறா பந்தயம் நடந்தது. காயல்பட்டினம் புறா பந்தய கிளப் சார்பில்  5ம் ஆண்டு புறா பந்தயம் நடந்தது.  இதில் மொத்தம் 10 நபர்களின் 49 புறாக்கள் கலந்துகொண்டது.  திருச்சியில் இருந்து திறக்கப்பட்ட புறாக்கள் காயல்பட்டினம் வரை 284கி.மீ. தூரத்தை கடந்து வந்தது. பந்தயத்தில்  அழகாபுரியை சேர்ந்த பவி என்பவருக்கு சொந்தமான புறா 5மணிநேரம் 3நிமிடம்,10வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலாவது பரிசையும், 5 மணிநேரம், 5நிமிடம், 43 வினாடியில் பந்தய இலக்கை அடைந்து 2ம் இடத்தையும் முறையே வென்றது.  காயல்பட்டினம் கோமான் தெருவை சேர்ந்த சாபிக் என்பவருக்கு சொந்தமான புறா 5மணிநேரம், 5நிமிடம், 53வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்து 3ம் பரிசை வென்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் புறா கிளப்பின் சார்பில்  பரிசுகள் வழங்கப்பட்டது.    மேலும் இந்த முறை புறாக்கள் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட மழையின் காரணமாக தாமதாதமாக வந்துள்ளது தெரியவந்தது.  போட்டியின் ஏற்பாடுகளை தலைவர் முகமது ரியாஸ், துணை தலைவர் லெப்பை, செயலாளர் முகம்மது ஹாசிம் பொருளாளர் அகமது ஆலோசகர் அசார் மற்றும் மகபூல், அனைத்து நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

Related Stories: