தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா

திருச்செந்தூர், ஜன.21: திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை உஷா முன்னிலை வகித்தார். விழாவில் கோலப் போட்டி, கும்மி, கோலாட்டம், கபடி மற்றும் கிராமிய நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    உடன்குடி: குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளித்தாளாளர் ராதா ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத்தலைவி சொர்ணப்பிரியா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, கோலமிடுதல், உறியடித்தல், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.

   குளத்தூர்: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்துநாடார் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்வி சங்கத்தலைவர் தாளமுத்து தலைமை வகித்தார். கிராமத்தலைவர் சின்னச்சாமி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மரியஅனிதா மற்றும் ஆசிரியர்கள் சமத்துவ பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படையலிட்டு வணங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

    விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு யூனியன் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் பிடிஓக்கள் தங்கவேல், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் முன்புறத்தில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் யூனியன்தலைவர் முனியசக்திராமச்சந்திரன் சார்பில் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related Stories: