×

பிரதமர் கலந்துரையாடல் ஜெய்வாபாய் பள்ளியில் நேரலையாக ஒளிப்பரப்பு

திருப்பூர், ஜன. 21:  பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நேரலையாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியியில் ஒளிப்பரப்பப்பட்டது.
 அரசு பொதுத்தேர்வை எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வை பயமின்றி, பதட்டமின்றி எழுதுவதற்காக ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். 3வது முறையாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லி தல்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. விழாவில் மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். அவர்களில் 1,050 பேர் ‘பரிக்ஷா பே சார்ச்சா 2020’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தி நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில் திருப்பூரில் இருந்து பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர் சஞ்சய் செல்வம் உள்பட 4 பேர் தேர்வாகி இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 இந்நிகழ்ச்சியை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நேரலையாக நேற்று ஒளிப்பரப்பப்பட்டது. அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக காணொளி அறையில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது. இந்தி மொழியில் பிரதமர் பேசியதால் மாணவிகள் ஒன்றும் புரியாமல் தவித்தனர். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமரின் பேச்சை, இந்தி தெரிந்த ஆசிரியர்கள் மாணவிகளுக்கு தமிழில் விளக்கினர்.

Tags : Jaiwabai School ,
× RELATED வடக்கு குறுமைய மாணவியர் கால்பந்து...