ஆர்.கே.ஆர் ஞானோதயா பள்ளியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம்

திருப்பூர், ஜன. 21: கொடிங்கியம் ஆர்.கேஆர் ஞானோதயா மெட்ரிக் பள்ளியில் கடந்த 13ம் தேதி கிராமியப் பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இவ்விழாவிற்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ரவிகுமார் மற்றும் பொள்ளாச்சி தீயனைப்புத்துறை தேசிய விருது பெற்ற உமாபதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி காப்புக்கட்டித் விழாவை துவக்கி வைத்தார். உழவர்களின் சிறப்பையும், உழவுக்கு உதவும்  மாடுகளின் மகத்துவத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் விழா நடைபெற்றது.        தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக சூரியப் பொங்கல், கரகாட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல், பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல், ரங்கராட்டினம், செங்கல் நடை விளையாட்டு, சைக்கிள் மெது ஓட்டம், சாக்கு ஓட்டம், கும்மியடித்தல், பூப்பறிக்க வருதல் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன.  இதில் சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று விழாக்கள்  நடைபெற்றன. பொங்கல் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் பெருமக்களையும், விழாவினை சிறப்பு செய்த மாணவர்களையும் உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி, செயலர் ஆர்.கே.ஆர் கார்த்திக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: