×

தடுப்புசுவர் கட்டி தர கோரி கிராம மக்கள் மனு

ஊட்டி, ஜன. 21:கோத்தகிரி கேர்பெட்டா அருகேயுள்ள எரிசிபெட்டா, அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் தடுப்புசுவர் கட்டி தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட எரிசிபெட்டா கிராமத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுமார் 70 அடி நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்புசுவர் கட்ட நடவடிக்கை எடுத்தது. அதேபோல் அதற்கு அருகாமையில் சேதமடைந்த பகுதியில் தடுப்புசுவரும், குடியிருப்புகளுக்கு செல்ல நடைபாதையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னை இந்திரா நகர் பகுதியில் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரு இடங்களில் மண் திட்டுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மழை காலங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில் தடுப்புசுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...