கோவை-அவிநாசி சாலையில் ஓடும் வேனில் தீ பிடித்தது

கோவை, ஜன.21: கோவை-பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர்  டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய வேன் பழுதடைந்ததால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக நீலாம்பூரில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பிற்கு வேனை  ஓட்டி சென்றார். அவர் பீளமேடு சர்தார் வல்லபாய் ரோட்டில் செல்லும் போது வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தததால் முருகன் காரை சாலை ஓரமாக நிறுத்தி அதனை சரி செய்ய முயன்றார். ஆனால் சிறிது நேரத்தில் வேன் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் வேன் எரிந்து சேதமானது.

Advertising
Advertising

Related Stories: