×

கலெக்டர் அலுவலகத்தில் ஹெல்ெமட் திருடர்கள் நடமாட்டம்

கோவை, ஜன. 21: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் ஹெல்ெமட்டுகளை திருடர்கள் திருடி செல்வதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் ஹெல்மெட்டுகளை வைத்துவிட்டு செல்வது வழக்கம், சிலர் ஹெல்ெமட்டுகளை வாகனங்களில் பூட்டிவிட்டு செல்வதும் வழக்கம். இந்த நிலையில் அந்த ஹெல்மெட்டுகள் கடந்த சில மாதங்களாக திருடப்பட்டு வருகின்றன. இரு சக்கர வாகனத்தில் வைக்கப்படும் ஹெல்ெமட்டுகள் திருடப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும். அப்ேபாது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து காணப்படும். இதை நோட்டமிட்டு திருடர்கள் வாகனங்களில் வைக்கப்படும் விலை உயர்ந்த ஹெட்ெமட்டுகளை திருடி செல்கின்றனர்.ஹெல்ெமட் திருட்டு குறித்து போலீசில் புகார் அளிக்க யாரும் முன்வருவது இல்லை. இதனால் இந்த திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Helmet thieves ,Collector ,office ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...