×

மூட்டையில் குவியும் கோழி கழிவுகள்

கோவை, ஜன.21: கோவை நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன. சுமார் ஆயிரம் கடைகள் மாநகராட்சி உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. தினமும் பல ஆயிரம்  கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
அனுமதியில்லாத, சுகாதாரமில்லாத இறைச்சிக்கடைகளால் துர்நாற்றம் அதிகரித்து வருகிறது. இறைச்சிக்கழிவுகளை குடியிருப்பு, ரோடு, பொது இடங்களில் கொட்டுவதும், ரத்த கழிவுநீரை சாக்கடையில் விடுவதும் வெளிப்படையாகவே நடக்கிறது. சில பகுதியில் சாதாரண குப்பையுடன் இறைச்சிக்கழிவுளையும் கொட்டுகிறார்கள். இந்த அசுத்த கேடுகளை பார்த்து பொதுமக்கள் மூக்கை பொத்தி கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது. நகரில் வாலாங்குளம், பெரியகுளம், சுங்கம் பைபாஸ் ரோடு, புலியகுளம், அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கோழி இறைச்சிக்கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் சிலர் காலி சிமெண்ட் சாக்கில் மூட்டையாக கட்டி கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் அதிகமாகி விட்டதாக மக்கள் புலம்புகின்றனர். இறைச்சிக்கழிவுகளை சேகரிக்க மாநகராட்சிக்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால் இதை சிலர் செய்வதில்லை. கழிவுகளை ரோட்டோரத்திலும், சாதாரண குப்பைகள் கொட்டும் தொட்டியிலும் கொட்டி அசுத்தம் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை