விதி மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை

கோவை, ஜன.21 கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் சாலை பாதுகாப்பு வார விழாவை துவக்கி வைத்து கலெக்டர் ராஜாமணி கூறுகையில், சாலை விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் மற்றும் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 31வது சாலை பாதுகாப்பு வார  விழாவையொட்டி இன்று வாக்கத்தான் நிகழ்ச்சி, நாளை பல்வேறு  இடங்களில் மருத்துவ முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதிமுறைகள் மீறும் வாகனங்கள் மீது கடும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 19.3  சதவீதம் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்து உள்ளது. கடந்த  ஆண்டு சாலை விபத்துகளால் 560 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டு (2019)  452 ஆக குறைந்து உள்ளது. வரும் ஆண்டு உயிரிழப்புகளை மேலும் குறைக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும், சாலை பாதுகாப்பு குறித்து தொடர்  கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விதிமுறை மீறிய 3400 மேற்பட்ட  வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தனியார்  வாகனங்கள் மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகிறது. தொடர் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Related Stories: