டெக்ஸாஸ் ஏ.அன்ட்எம். பல்கலையுடன்  கிருஷ்ணா கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை,  ஜன 21 :  கிருஷ்ணா கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் டெக்ஸாசில் உள்ள டெக்ஸாஸ் ஏ.அன்ட்எம். பல்கலைக்கழக சட்டத்துறையுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.கல்லூரியில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், ஏ.அன்ட்எம் பல்கலைக்கழகத்தின் டீன் ராபர்ட் ஆஹாடி,  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாகி சுந்தரராமன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன் மூலம் ஏஅன்ட்எம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசியர்கள், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின்  பேராசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு காப்பீடு உரிமை பற்றி பயிற்சி கொடுக்கவுள்ளனர்.  இந்நிகழ்ச்சியில் ராபர்ட் ஆஹாடி பேசுகையில், ‘‘உயர்கல்வி முன்னேற்றத்திற்கு மாணவர்களின் பங்குதான் மிகவும் முக்கியம். உயர்கல்வி எப்போதும் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் செல்ல வேண்டும்,’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: