கோபி அருகே பேக்கரி உரிமையாளர் மீது தாக்குதல்

கோபி, ஜன.21:  கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி தம்பிகலைஅய்யன் கோயில் பிரிவை சேர்ந்தவர் கதிர்காமு. இவர் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு கதிர்காமு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது, கடை முன்பு அமர்ந்திருந்த ஒரு வாலிபர், கதிர்காமுவிடம் தகராறில் ஈடுபட்டார்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்த வாலிபரின் நண்பர்கள் சிலர், கடை உரிமையாளர் கதிர்காமுவை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர். மேலும், கடை முன்பு இருந்த நாற்காலியை தூக்கி வீசி உடைத்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து கதிர்காமு கொடுத்த புகாரின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் உரிமையாளரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இதற்கிடையே பேக்கரி உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: